Kaṇṇinuṇ Siṛuthāmbu · Madhurakavi Āzhvār · pasurams 937–947
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1)
I praise the god, the divine Māyan, my father, who was tied by Yashoda with a small rope. If I approach the place where the Nambi of south Kuruhur stays and say his name, nectar will spring from my tongue.
📖 Story
Madhurakavi Āzhvār is unique among the Alvars: he sang not of the Lord but of his teacher, Nammāzhvār. Eleven verses pour out a disciple's gratitude — that through his master's grace alone the divine became real to him. It is the Prabandham's quiet teaching that the way to God runs through the one who shows him to you.
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2)
I praise him with my tongue and relish it. I yearn for the golden feet of Nambi of Thirukkuruhur and I know no other god but Nambi of Thirukuruhur. I wander and sing sweet songs about him.
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்- உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே (3)
Even if I have to wander all over, I will go to rich Thirukkuruhur and see the dark, beautiful form of the divine god. If I go there and become a devotee of Nambi that will be the most wonderful thing I could ever have.
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மை ஆகக் கருதுவர் ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே (4)
The excellent, orthodox Vediyars skilled in the four Vedas do not think I am a good person, but Sadagopan Nambi accepts me and he is my mother, my chief and my ruler.
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே (5)
Before, I believed in the wealth of others and beautiful women, but today I have become a friend and devotee of Nambi of Thirukkuruhur, filled with pure golden palaces, and I dance there.
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே (6)
My dear god gave his grace so I could praise his fame from today for the next seven births. Nambi of Thirukkuruhur, filled with hills that look like large palaces, will not disgrace me.
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல் வினை பாற்றி அருளினான் எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே (7)
My chief Māṛan the son of Kāri accepted me and made my bad karma go away. I will tell the people of all the eight directions of the grace I have received from Sadagopan, the wonderful Tamil poet.
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ் அரு மறையின் பொருள் அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே (8)
He sang a thousand sweet Tamil pāsurams through the grace of god and described the meaning of the divine Vedas so that his devotees praise the blessings that he received from the god. His giving his blessing is the best thing in the world.
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்- புக்க காதல் அடிமைப் பயன் அன்றே (9)
He described the meaning of the Vedas that the best Vediyars know and recite. My chief Sadagopan praised by all made me learn the Vedas. To be his devotee and to serve him is the greatest love I can receive. CHECK
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே (10)
Nambi will accept anyone as his devotee whether or not he receives benefit from him, even if he is not his friend. The Nambi Thirukkuruhur surrounded by beautiful groves where cuckoo birds sing will change him and accept him, and keep him with him. I am striving to receive the love of Nambi, worshipping his ankleted feet.
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11) ------------ This file was last updated on 6 Sept. 2018. Feel free to send the corrections to the Webmaster.
Nambi of south Thirukuruhur, our friend, is the friend of all who approach him. If devotees believe in Madhurakavi’s words, they will see Vaikuṇṭam and abide there. -------------- End of part 1 covering first thousand verses (pasurams 1 - 947) This file was last updated on 4 Sept. 2018 Feel free to send the corrections to the webmaster.